Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 2714 Likes :
Ingredients
பச்சரிசி 500 கிராம் கடலைப்பருப்பு 250 கிராம் பச்சை மிளகாய் 2 கடுகு 1 தேக்கரண்டி கறிவேப்பிலை 1 ஆர்க்கு தேங்காய்த்துறுவல் 3 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் 1 உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நன்றாக வதக்கியபின் கடலைப்பருப்பு, உப்புத்தூள், தேங்காய்த்துறுவல், சேர்த்துக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
மாவுடன் உப்புத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மாவில் சிறிதளவு கையில் எடுத்து மெல்லிய வட்டமாகத் தட்டி, நடுவில் கடலைப்பருப்பு சுண்டல் கலவையை சிறிதளவு வைத்து அரை வட்டமாக மடக்கி, ஓரங்களைப் பொருத்திக் கொள்ளவும்.
இதுபோல் எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சில கொழுக்கட்டைகளை வைத்து வேக வைக்கவும்.
செய்து வைத்த எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.