Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 7102 Likes :
Ingredients
கடலைமாவு 500 கிராம்
சர்க்கரை (Sugar) 1 கிலோ
கேசரி கலர்பொடி 1 சிட்டிகை
குங்குமப்பூ 1 சிட்டிகை
அரிசிமாவு 2 மேஜைக்கரண்டி
நெய் 750 மில்லி லிட்டர்
Preparation Method
கடலைமாவையும், அரிசி மாவையும் கலந்து, வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் 2½ கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரையைப் போட்டு கம்பி பதமாக பாகு காய்ச்சி, கேசரி கலர்பொடி, குங்குமப்பூ கலந்து கொள்ளவும்.
கடலைமாவு—அரிசிமாவு கலவையுடன் தண்ணீர் சேர்த்து, தோசைமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும், காய்ந்து கொண்டிருக்கும் நெய்யின் மேல் பக்கமாக கண் கரண்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, குழிகரண்டியில் மாவை எடுத்து கண் கரண்டியின் மீது தேய்த்து விடவும்.
அதன்பின் தேய்த்துவிட்ட பூந்தியை கிளறி, வெந்ததும் எடுத்து, சீனிப்பாகில் போட்டு லேஸாக அழுத்தி விடவும்.
சில நிமிடங்கள் கழித்து பூந்தியை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இது போல், கரைத்து வைத்துள்ள எல்லா மாவிலும் பூந்தி தயாரித்து, பரிமாறவும்.