Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 5854 Likes :
Ingredients
பச்சரிசி 1 கிலோ
வெல்லத்தூள் 750 கிராம்
ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி
கசகசா 1 மேஜைக்கரண்டி
நெய் 2 தேக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 1 லிட்டர்
Preparation Method
பச்சரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
இதில் 200 கிராம் மாவை (1 கப்) பெரிய கண் ஜல்லடையில் சலித்து, பரபரப்பான மாவை தனியே எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள மாவை பொடிகண் ஜல்லடையில் சலித்து, தனியே எடுத்து வைத்த மாவை இதில் கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு பாகு காய்ச்சவும்.
ஒரு தட்டில் தண்ணீர் வைத்து அதில் 2 சொட்டு பாகைப் போட்டால் பாகு கரையாமல் கையில் பிசுபிசுவென்று உருட்ட வரும். இதுதான் வெல்லப்பாகின் பக்குவம்.
இந்தப் பக்குவம் ஆனதும் அரிசி மாவில் பாகை ஊற்றிக் கிளறவும். கசகசா, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்துக் கொள்ளவும்.
மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.
வாழை இலையில் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, இலை மீது வைத்து, வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வட்டமாக்கிய அதிரசத்தை எண்ணெய்யில் போட்டு, வாணலியில் உள்ள எண்ணெய்யை சிறிதளவு கரண்டியில் எடுத்து வெந்து கொண்டிருக்கும் அதிரசத்தின் மீது ஊற்றவும். திருப்பிப் போட்டு, வெந்ததும் ஒரு கரண்டியால் அதிரசத்தை எடுத்து, இன்னொரு கரண்டியால் அழுத்தி எண்ணெய்யை வடியச் செய்து எடுத்து வைக்கவும்.
ஒரு தடவைக்கு 4 அல்லது 5 வீதம் அதிரசத்தைப் போட்டுப் பொரித்து எடுத்து பரிமாறவும்.