அச்சு முறுக்கு

Spread The Taste
Makes
30 அச்சுமுறுக்குகள்
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 7879
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து நைஸான மாவாக்கிக் கொள்ளவும்.
  • முட்டைகளை அடித்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அரிசிமாவுடன் முட்டை, தேங்காய் பால், மைதா, சீனி, உப்புத்தூள் இவற்றை சேர்த்து, நன்றாக கலக்கிக் கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அச்சு முறுக்கு அச்சை வாணலியிலுள்ள எண்ணெய்யில் லேசா சூடாக்கி, அதன்பின் அச்சை மாவில் நனைத்து அதை காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யினுள் விடவும்.
  • ஓரளவு வெந்ததும் மாவு, அச்சின் வடிவத்தில் எண்ணெய்யில் வெளிவரும் பொரித்து எடுக்கவும்.  எண்ணெய்யில் அச்சை அதிகமாக காய விடக்கூடாது. காயாமலும் இருக்கக்கூடாது.
  • அச்சின் முக்கால் பகுதியை மட்டும் மாவில் நனைக்க வேண்டும்.  இவ்வித குறிப்புகளை கவனமாக கையாண்டால் அச்சு முறுக்கு பக்குவமாக வரும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA