தவால் வடை

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 மணி நேரம்
Hits   : 12410
Likes :

Preparation Method

  • துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி இவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்கவும்.
  • சிறுபருப்பைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைக்கவும்.
  • துவரம்பருப்பு கலவையுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக ஆட்டி எடுக்கவும்.
  • உளுந்தை, தேவையான உப்பு சேர்த்து வழுவழுப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • சிறுபருப்பை தண்ணீர் இன்றி வடித்துக் கொள்ளவும்.
  • மாவுகளுடன் சிறுபருப்பைக் கலந்து கொள்ளவும்.
  • தேங்காயை மிகவும் பொடி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கலக்கிய மாவுடன் நறுக்கிய பொருட்களைச் சேர்த்துக் கிளறவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து மாவில் கொட்டி, கலந்து கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு மாவை, கரண்டியில் எடுத்து ஊற்றி, இரண்டு பக்கமும் பொன் நிறமாக சிவந்ததும் எடுக்கவும்.
  • இதுபோல எல்லா மாவையும் வடைகளாக ஊற்றி, பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA