காரா பூந்தி

Spread The Taste
Makes
2 கப் அளவு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 1 மணிநேரம்
Hits   : 5851
Likes :

Preparation Method

  • கடலைமாவு, அரிசிமாவு, உப்புத்தூள், மஞ்சள் கலர்பொடி, பெருங்காயத்தூள் இவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கரண்டியில் சிறிதளவு மாவை எடுத்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யின் மேல் பக்கமாக பிடித்து இன்னொரு கரண்டியால் மாவை தேய்த்து விடவும்.
  • அதன்பின் கிளறி விட்டு, வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
  • இது போல் எல்லா மாவிலும் காரா பூந்தி தயார் செய்து கொள்ளவும்.
  • வேறு வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் வறுகடலையை மறுபடியும் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • அதன்பின் முந்திரிப்பருப்பை வறுத்து எடுக்கவும்.
  • கறிவேப்பிலையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • தயாரித்த காராபூந்தியுடன் மிளகாய்த்தூள், வறுகடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை இவற்றைக் கலந்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவையான போது பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA