மட்டன் குருமா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5241
Likes :

Preparation Method

  • கறித்துண்டுகளுடன் தயிர் சேர்த்து, கலந்து 1 மணி நேரம் ஊற விடவும்.
  • 1 வெங்காயம், கசகசா, தனியாத்தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், மஞ்சள்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை தனியாக, வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இன்னொரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்து வைத்துள்ள மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • 5 நிமிடங்கள் வதங்கியதும் தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • கறி வெந்ததும் அரைத்த தேங்காய் போட்டு, கிளறி குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA