Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 7955 Likes :
Ingredients
வாத்து கறி 1 கிலோ சிகப்பு மிளகாய் 10 மிளகு 2 தேக்கரண்டி சீரகம் 2 தேக்கரண்டி தனியா 2 தேக்கரண்டி சின்ன வெங்காயம் 10 பெரிய வெங்காயம் 1 தேங்காய் 1 மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கறியை மஞ்சள்தூள் போட்டு புரட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், இவற்றை வறுத்து, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், அரைத்த மஸாலா இவற்றைப் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். அனைத்தும் வதங்கியதும் கறியைப் போட்டு வதக்கவும்.
5 நிமிடங்கள் வதங்கியபின் தேங்காய்ப்பாலை ஊற்றவும்.
உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும்.