முட்டை குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7804
Likes :

Preparation Method

  • முட்டைகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தனியாத்தூள், சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான, அகன்ற பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, அரைத்த மஸாலாவை போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் தேங்காய்ப்பால் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
  • முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து, குழம்பில் தள்ளி தள்ளி ஊற்றவும்.
  • தீயை மிதமாக்கவும்.
  • பாத்திரத்தின் இரண்டு பக்கமும் பிடித்து மெதுவாக சுழற்றி விடவும்.
  • முட்டைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் கவனமாக தயாரிக்க வேண்டும்.
  • முட்டைகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA