கோதுமை தோசை

Spread The Taste
Serves
6
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 4 நிமிடங்கள்
Hits   : 12715
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்புத்தூள், தண்ணீர், மோர் இவற்றை ஒன்றாகக் கலந்து கிளறவும்.
  • கலக்கிய மாவு சற்று இளக்கமாக இருப்பது அவசியம்.
  • பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • கலக்கிய மாவில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து தோசைக்கல்லின் விளிம்பிலிருந்து சுற்றி, ஊற்றவும்.
  • தோசையை சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும்.
  • 3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்து, தோசை முறுகலாக இருந்தால் இரண்டாக மடித்து எடுக்கவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் தோசைகள் செய்து பரிமாறவும்.
Engineered By ZITIMA