காலிஃப்ளவரை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, கரகரப்பாக மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதன்பின் கொத்தமல்லி இலை, புதினா இலை போட்டு வதக்கவும்.
காலிஃப்ளவர் அரைத்தது போட்டு, தனியாத்தூள் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கரம்மஸாலாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு இவற்றைப் போட்டு வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
தோசை செய்முறை
சிகப்பு மிளகாயை 30 நிமிடங்கள் ஊற வைத்து, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து, தோசைமாவை பரவலாக ஊற்றவும்.
சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் சிவந்ததும் மறுபடியும் முன்பக்கம் திருப்பவும். இதன் மீது அரைத்து வைத்துள்ள மிளகாய் பூண்டு கலவையை பரவலாகத் தடவவும்.