மஞ்சள் பூசணி துவையல்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5624
Likes :

Preparation Method

  • மஞ்சள் பூசணியின் தோலை சீவியபின், துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பைப் போட்டு வறுக்கவும்.
  • அதன்பின் உளுத்தம் பருப்பைப் போட்டு வறுக்கவும்.
  • அதன்பின் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பெருங்காயத்தூள் போட்டு வதக்கி, இவற்றுள் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாயை எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறொரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மஞ்சள் பூசணித் துண்டுகள், புளி போட்டு வதக்கி மூடி வைக்கவும்.
  • 2 நிமிடங்கள் ஆனதும் இறக்கி வைக்கவும்.
  • ஆறியதும் முதலில் பூசணித் துண்டுகள், புளி, பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • அதன்பின் வறுத்த பருப்பு வகைகளைப் போட்டு அரைக்கவும் (வழுவழுப்பாக அரைக்கக் கூடாது.)
  • அரைத்ததை ஒரு பாத்திரத்திதல் எடுத்து வைக்கவும்.
  • வேறொரு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, இத்துடன் அரைத்த மஞ்சள் பூசணி கலவையைப் போட்டு லேஸாக வதக்கி இறக்கி, இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் பரிமாறலாம்.

 

Engineered By ZITIMA