சிம்பிள் கோழி வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7308
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் மீது கத்தியால் கீறிக் கொள்ளவும்.
  • 2 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, 2 தேக்கரண்டி வினிகர் இவற்றை கோழிக்கறி துண்டுகளுடன் கலந்து புரட்டி வைத்து 5 நிமிடங்கள் ஆனதும் கழுவிக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகளுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மஸாலாத்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, மிளகுத்தூள், உப்புத்தூள் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது Sauce—Pan—ல் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுப் பொரித்து (Shallow Fry) எடுக்கவும்.
  • மிகுதியான எண்ணெய் இருந்தால் எடுத்து விட்டு மீதமுள்ள எண்ணெய்யில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, இத்துடன் பொரித்து வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA