லைம் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 7802
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து, 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • சீரகம், தனியாவை லேஸாக வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளை ஒரு தடவைக்கு 5 அல்லது 6 வீதம் போட்டு, பொரித்து எடுத்து வைக்கவும்.
  • வேறு வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் இவற்றை போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின், பொரித்து வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் ஸோயாஸாஸ், எலுமிச்சைச்சாறு, ஊற்றி, கிளறி கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
  • ஸோயா ஸாஸ் சேர்ப்பதால் உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.
Engineered By ZITIMA