காஷ்மீரி சிக்கன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6560
Likes :

Preparation Method

  • கோழிக்கறியின் தொடைப்பகுதிகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஏலக்காயின் விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து, ஏலக்காய் விதைகளை கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் தனியா, சீரகம், மிளகு, கிராம்பு, பட்டை இவற்றை வறுத்து எடுத்து, பட்டை தவிர மற்ற பொருட்களை தூளாக்கிக் கொள்ளவும்.
  • குங்குமப்பூவை சிறிதளவு சுடுதண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • பிஸ்தா பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு ஊற வைத்து, அதன்பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற, பெரிய வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • பொன் நிறமாக வதங்கியதும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தூளாக்கிய மஸாலா பொருட்கள், பட்டை, புதினா இலை இவற்றைப் போட்டு, கிளறவும்.
  • இப்போது வாணலியை இறக்கி வைத்து, தயிர் சேர்த்து, 3 நிமிடங்கள் கிளறவும்.
  • மறுபடியும் சூடேற்றி மறுபடியும் 3 நிமிடங்கடள் கிளறவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.
  • தீயை மிதமாக்கி வாணலியை மூடி வைக்கவும்.
  • 20 நிமிடங்கள் வரை மூடி வைத்து வாணலியின் அடி பிடித்து விடாமல் பார்த்து, அவ்வப்போது கிளறி விடவும்.
  • அடி பிடித்து விடும் போல இருந்தால் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்க்கவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • அரைத்த பாதாம்பருப்பு, நறுக்கி வைத்துள்ள பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ, கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து கிளறவும். மூடி வைக்கவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் மிருதுவாக வெந்தது, வதங்கியதும் இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA