ஜிஞ்சர் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8921
Likes :

Preparation Method

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி எடுத்து, அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கலர் பொடி, இஞ்சி—பூண்டு அரைத்தது, உப்பு போட்டுக் கலந்து புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை தண்ணீர் இன்றி ஆகும் வரை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, வெங்காயம் அரைத்தது, பச்சை மிளகாய், இஞ்சி அரைத்தது, பூண்டு அரைத்தது, சர்க்கரை போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  • வதக்கியபின் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • சிவக்க வதங்கியதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA