Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: சுமார் 30 to 40 நிமிடங்கள் 180° F—ல் அவன்—ஐ (Oven)
Hits : 6856 Likes :
Ingredients
மைதாமாவு 3 கப்
முட்டை 3
வெண்ணெய் 200 கிராம்
பால் 250 மில்லி லிட்டர்
வெனிலா எஸென்ஸ் 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் (Baking Powder) 1 தேக்கரண்டி
உப்புத்தூள் 2 சிட்டிகை
சர்க்கரை (Sugar) 250 கிராம்
முந்திரிப்பருப்பு 50 கிராம்
பாதாம்பருப்பு 50 கிராம்
Preparation Method
மைதாமாவு, பேக்கிங்பவுடர் இவற்றை சலித்துக் கொள்ளவும்.
முட்டையின் மஞ்சள்கரு தனியாகவும், வெள்ளைக்கருவை தனியாகவும் பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
Electrical Blender — பயன்படுத்தி இரண்டையும் தனித்தனியாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, பேக்கிங் பவுடர் கலவையை போட்டு, வெனிலா எஸென்ஸ் சேர்த்து கிளறவும்.
சர்க்கரையுடன் மஞ்சள் கருவை சேர்த்து அடித்து கலக்கிக் கொள்ளவும்.
அதன்பின், வெண்ணெய் போட்டு மத்து பயன்படுத்தி அல்லது குழிக்கரண்டியினால் நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
மைதாமாவு கலவையை சேர்த்துக் கலக்கவும்.
அதன்பின் அடித்து வைத்துள்ள வெள்ளைக் கருவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கலக்கியபின் பால் மற்றும் உப்புத்தூள் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
கிளறியபின் உலர் பருப்பு வகைகள் (Nuts) சேர்த்துக் கொள்ளவும்.
கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, இதன் மீது சிறிதளவு தூவி பரவுவதற்காக தட்டியபின் கேக்மாவு கலவையை பாத்திரத்தில் முக்கால் பாகம் ஊற்றி, சமமாக பரவுவதற்காக தட்டி, முன்கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven) வைத்து சுமார் 40 நிமிடங்கள் வைத்து, அதன்பின் வெந்தது பார்த்து எடுத்து, ஓரளவு ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.