Preparation Time: 25 நிமிடங்கள் Cooking Time: சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் — 20 நிமிடங்கள் அ
Hits : 9287 Likes :
Ingredients
மைதாமாவு 500 கிராம்
வெண்ணெய் 250 கிராம்
சர்க்கரை (Sugar) 250 கிராம்
முட்டை 4
உப்புத்தூள் 2 சிட்டிகை
பேக்கிங் பவுடர் (Baking Powder) 4 தேக்கரண்டி
பால் 250 மில்லி லிட்டர்
வெனிலா எஸென்ஸ் 1 தேக்கரண்டி
கொக்கோ பவுடர் 2 மேஜைக்கரண்டி
சமையல் சோடா 3 சிட்டிகை
பாதாம் எஸென்ஸ் 3 சொட்டுகள்
Preparation Method
மைதாமாவுடன், பேக்கிங்பவுடரை கலந்து சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெய், சர்க்கரையையும் கலந்து Electrical Blender — பயன்படுத்தி நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
அதன்பின் வெண்ணெய்—சர்க்கரை கலவையுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக ஊற்றி கலந்து, அடித்துக் கொள்ளவும்.
இக்கலவையுடன் மைதாமாவு, பால் இரண்டையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக் கொண்டே ஊற்றவும்.
இக்கலவையுடன் வெனிலா எஸென்ஸ் சேர்த்து, கலந்து பாதி அளவு கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
கொக்கோ பவுடரையும், சமையல் சோடாவையும் 3 மேஜைக்கரண்டி சூடான தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
பாதி அளவு எடுத்து வைத்துள்ள மைதாமாவு கலவையுடன் கொக்கோ பவுடர் கலவையை ஊற்றி கலந்து கொள்ளவும்.
பாதாம் எஸென்ஸையும் கலந்து கொள்ளவும்.
கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி இதன் மீது மைதாமாவு தூவி, அதன்பின் மீதமுள்ள வெள்ளை நிற மாவையும், கொக்கோ பவுடர் கலந்த மாவையும் மாற்றி, மாற்றி ஊற்றிக் கொள்ளவும்.
கேக் மாவு சமமாக பரவுவதற்காக பாத்திரத்தை லேஸாக தட்டவும்.
முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven) கேக் பாத்திரத்தை வைத்து, 1 மணி நேரம், 15 நிமிடங்கள் வைத்து அதன்பின் வெந்தது பார்த்து எடுத்து ஓரளவு ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.