தேங்காய் பூ லேயர் கேக்

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 மணிநேரம் அவன்—ஐ (Oven) 350° F—ல் முன் கூட்டியே
Hits   : 10320
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் பேக்கிங்பவுடர் கலந்து சலித்துக் கொள்ளவும்.
  • வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்றாக அடித்து, கலக்கிக் கொள்ளவும்.
  • முட்டைகளை வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள்கருவை தனியாகவும் பிரித்து Electrical Blender — பயன்படுத்தி அடித்துக் கொள்ளவும்.
  • அதன்பின் தேங்காய்த்துறுவல், இரண்டு தேக்கரண்டி தண்ணீர், மைதாமாவு இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து, மெதுவாக கிளறவும்.
  • இந்த கலவையை கேக் வேக வைக்கும் 2 பாத்திரங்களில் வெண்ணெய் தடவி, மைதாமாவு தூவி, மைதா  பரவுவதற்காக பாத்திரங்களை லேஸாக தட்டவும்.
  • மாவை ஊற்றிய பின் மாவு சமமாக பரவுவதற்காக லேஸாக தட்டியபின் முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven) வைக்கவும்.
  • 1 மணிநேரம் ஆனபின் வெந்தது பார்த்து, எடுத்து ஓரளவு ஆறியதும் ஒரு கேக் மீது தேங்காய் க்ரீம் தடவி, மற்றொரு கேக்கை வைத்து, கேக்கின் பக்கங்களிலும், மேல் பகுதியிலும் தேங்காய் க்ரீம் தடவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

தேங்காய் க்ரீம் தயாரிக்கும் செய்முறை:

  • 200 கிராம் வெண்ணெய்யுடன், 400 கிராம் தூளாக்கிய சர்க்கரை மற்றும் சிறிதளவு உலர்ந்த தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கலக்கவும். இது தேங்காய் க்ரீம் எனப்படும்.
Engineered By ZITIMA