பனீர் பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 13253
Likes :

Preparation Method

  • பனீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் துண்டுகளை வதக்கி, இறக்கி தனியே வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்ததைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதக்கியபின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும், புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
  • தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 கப் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டு, மூடி வைக்கவும்.
  • தீயை மிதமாக்கவும்.
  • அரிசி வெந்ததும் திறந்து, பனீர் துண்டுகுள், மீதமுள்ள நெய் இவற்றை சேர்த்து, மெதுவாகக் கிளறி இறக்கி மூடி வைக்கவும்.
  • தேவையான போது எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA