காளான் சூப்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4636
Likes :

Preparation Method

காய்கறி வேக வைத்த தண்ணீர் செய்முறை:

  • வெங்காயம், காய்கறிகள் இவற்றுடன் 7 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில், வெயிட் போட்டு விசில் கேட்டு 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து, இறக்கி கொள்ளவும்.
  • குக்கர் திறக்க வந்த பின் வடிகட்டிக் கொள்ளவும்.

சூப் செய்முறை:

  • காய்கறி வேக வைத்த தண்ணீர் (Stock Water) தயாரித்துக் கொள்ளவும்.
  • இஞ்சியை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் காளான் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • கொதித்ததும் வினிகர், சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், அஜ்—னு—மோட்டோ, ஸோயா ஸாஸ், இவற்றைக் கலந்து கிளறவும்.
  • உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  • சோள மாவு கரைசலை ஊற்றி 1 நிமிடம் அதன்பின் இறக்கி, சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.

 

You Might Also Like

Engineered By ZITIMA