கொத்துக்கறி குழம்பு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 15089
Likes :

Preparation Method

  • கொத்துக்கறியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவி, 2 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்த மஸாலாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  • வேக வைத்துள்ள கொத்துக்கறியைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • கொத்துக்கறி வேக வைத்த தண்ணீருடன் ஊற்றலாம்.
  • தேங்காய்ப்பால் ஊற்றி, கொதிக்க விடவும்.
  • உப்பு சரி பார்த்து, தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும்.
  • குழம்பு கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA